எத்தியோப்பியாவில் கடும் பஞ்சம் மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா எச்சரிக்கை
04 Jul,2021
மத்திய அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம் இருந்தபோதிலும் எத்தியோப்பியாவில் அதிக மோதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
மேலும் எத்தியோப்பியாவின் தைக்ரேயில் 400,000 க்கும் அதிகமான மக்கள் இப்போது பஞ்சத்தில் உள்ளனர் என்றும் பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்த அமைப்பின் நிவாரணப் பணிகள் பிரிவு இடைகக்காலத் தலைவா் ரமேஷ் ராஜசிங்கம், தைக்ரேயில் பஞ்சம் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளது என கூறினார்.
அதன்படி கடுமையான பஞ்சத்தைச் சந்தித்து வருவோரின் எண்ணிக்கை 4 இலட்சமாக அதிகரித்துள்ளது என்றும் 18 லட்சம் பேர் பஞ்சத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.