ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக வலைத்தளத்தை வெளியிடவிருக்கும் டிரம்ப்!
04 Jul,2021
டொனால்ட் ட்ரம்ப் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்த அரசியல் தலைவர். தனது அதிரடி அறிவிப்புகளையும், விமர்சனங்களையும், சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வெளிப்படுத்த அவர் சமூ வலைதளங்களையே முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வந்தார். ஆனால் ஜனவரி 6-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தினுள் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரம்பின் அக்கவுண்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் ஆதரவாளர்களுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்து விடப்பட்ட ட்ரம்ப், சமூக வலைத்தள நிறுவனத்தை உருவாக்குவார் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்தை வாங்குவார் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் குழுவினர் GETTR என்ற சமூக வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் மக்கள் திரளாக இதை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து டிரம்ப் கெட்டர் என்ற சமூக வலைத்தளத்தை துவங்கியுள்ளார். அமெரிக்க நேரப்படி ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.