டெல்டா கொரோனா வைரஸ். WHO எச்சரிக்கை!
03 Jul,2021
உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் மத்தியில் உள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக உருமாறிய டெல்டா வைரஸ் வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் என்றும் இரண்டாவது அலை வைரஸை விட மோசமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், WHO டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், டெல்டா வகை வைரஸ் தற்போது 96 நாடுகளுக்கு பரவியுள்ளது. இது மிக வேகமாக பல நாடுகளுக்கு பரவி வருவதால் வரும் மாதங்களில் அனைத்து வகை வைரஸ்களில் டெல்டா வகையின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
மேலும், தற்போதைய நிலையில் ஆல்பா வகை கொரோனா வைரஸ் 172 நாடுகளில் பரவியுள்ளது. பீட்டா வகை வைரஸ் 120 நாடுகளிலும் காமா வகை வைரஸ் 72 நாடுகளிலும் பரவியுள்ளது. டெல்டா பிளஸ் வகை வைரஸ் மேலும் 12 நாடுகளுக்கு பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18.38 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு... உலக நிலவரம்!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18.38 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18.38 கோடியைக் கடந்துள்ளது.
ஆம், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.38 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.82 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 11.59 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 78,060-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.