ஈராக், சிரியாவில் புகுந்த "F 16" ஜெட்.. பரபர தாக்குதல்!
29 Jun,2021
ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்ற வழக்கமான வசனத்திற்கு ஏற்ப அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்று இருந்தாலும் கூட ஈரானுடன் அந்த நாட்டிற்கு இருக்கும் முடிவிற்கு வரவில்லை.
அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றபின் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. சீனாவை அணுகும் விதம் லேசாக மாறியுள்ளது. ஜி 7 நாடுகள், ஐநா அமைப்புடன் அமெரிக்க பழகும் விதமும் மாறியுள்ளது.
ஈரான் மோதல். பிடன் துணை அதிபராக இருந்த போது ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆதரவு அளித்து வந்தார்.. தற்போது அதிபராகவும் ஈரானுடன் அவர் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். மோதல் இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக ஈரான் மீது தாக்குதல் நடத்த பிடன் உத்தரவிட்டுள்ளார். சிரியாவிலும், ஈராக்கிலும் இருக்கும் ஈரானின் போராளி குழுக்கள், ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும்
என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஈராக் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட நிலையில் நேற்று மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எங்கு நேற்று ஈராக்கிலும், சிரியாவிலும் உள்ள இரண்டு இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இங்கு ஈரானின் படைகளும், ஐஎஸ் அமைப்பும் கேம்ப் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த இடங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்கியது. அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த F 16 மற்றும் F 15 ஜெட்கள் உள்ளே புகுந்து தாக்கியது. மரணம் இதில் எத்தனை பேர் பலியானார்கள்,
என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. ஈராக்கில் அமெரிக்க படைகள் உள்ளன. அதேபோல் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதை தடுக்கும் வகையில் ஈரானின் போராளி குழுக்கள், ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் ஈராக்கில் தாக்குதல் நடத்தி வருகிறது. டிரோன் டிரோன் அட்டாக் நடத்தி பேச்சுவார்த்தையை ஈரான் குலைத்து வருகிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களாக நடக்கும் ஈரானின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்கா ஏர் ஸ்டிரைக் நடத்தி உள்ளது. ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா புதுப்பிக்கும் முடிவில் உள்ளது. இதற்காக பிடன் முயன்று வருகிறார். ஆனால் ஆனால் இதற்காக ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தைகளை பிடன் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் டிரம்ப், ஒபாமா போலவே ஈரானை தொடக்கத்திலேயே "அடிக்க" முடிவெடுத்துள்ளார். கடந்த வருடம் ஈராக்கில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்ட பின் ஈரான் - அமெரிக்கா மோதல் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.