12 வருட ஆட்சி முடிவு; இஸ்ரேலில் புதிய பிரதமர் பதவியேற்பு!
14 Jun,2021
இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில் புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பெஞ்சமின் நேதன்யாகு பிரதமராக பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் பெஞ்சமின் ஆட்சி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் வைத்து வந்தன. இந்நிலையில் திடீரென இஸ்ரேலின் 8 எதிர்கட்சிகளும் கூட்டணி அமைத்ததால் பெஞ்சமின் நேதன்யாகு பதவி இழந்தார்.
இந்நிலையில் 8 எதிர்கட்சிகள் அடங்கிய கூட்டணி சார்பாக யமினா கட்சி தலைவர் நஃப்தலி பெனண்ட் இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் பிரதமராக இருப்பார் என்றும், அதற்கு பிறகு மற்றொரு கட்சியின் உறுப்பினர் பிரதமர் என பதவியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக் கொள்ள எதிர்கட்சிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.