சீனாவில் தடுப்பு மருந்து ஸ்பிரே..!
13 Jun,2021
பெய்ஜிங்: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பு மருந்துகளின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தில் இருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் சீனா நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய திரவநிலை தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இது பல நாடுகளை வியக்கச் செய்துள்ளது. வலி நிவாரண ஸ்பிரேபோல இதனை நாசி துவாரத்தில் அனைவரும் அடித்துக் கொள்ளலாம்.
இந்த திரவ தடுப்பு மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலில் குறைக்கிறது. எட்டரை கோடி தடுப்பு மருந்துகள் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தற்போது விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த தடுப்பு மருந்து ஸ்பிரே அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
இந்த திரவநிலை தடுப்பு மருந்து இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. இது உண்மையாகவே பலன் அளிக்குமானால் இதனை பொது மக்களுக்கு அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.