டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா
                  
                     10 Jun,2021
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.
	 
	 
	இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க கோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளன.
	 
	 
	இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முந்தைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தது.
	 
	இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் முடிவை ஜோ பைடன் நிர்வாகம் தற்போது கைவிட்டு விட்டது.