கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா!
09 Jun,2021
ரம்ப் ஆட்சியின் போது கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சீனா தான் என்றும், அந்நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வுஹானில் உள்ள ஒரு சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாகக் கூறப்படும் கருதுகோள் நம்பத்தகுந்ததாகவும், மேலும் விசாரணைக்குத் தகுதியானது என்றும் COVID-19 தோற்றம் குறித்த அமெரிக்க அரசாங்க தேசிய ஆய்வகத்தின் ஆய்வறிக்கை முடிவுக்கு வந்துள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கடந்த திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு 2020 மே மாதம் கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்டது. டிரம்ப் நிர்வாகத்தின் இறுதி மாதங்களில் தொற்றுநோய்களின் தோற்றம் குறித்து ஒரு விசாரணையை நடத்தியபோது, இந்த ஆய்வு பற்றி வெளியுறவுத்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. லாரன்ஸ் லிவர்மோர் மதிப்பீடு COVID-19 வைரஸின் மரபணு பகுப்பாய்வு பற்றியது என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க லாரன்ஸ் லிவர்மோர் மறுத்துவிட்டது. ட்ரம்ப் ஆட்சியின் போது கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணம் சீனா தான் என்றும், அந்நாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அந்த குற்றசாட்டை மறுத்த சீனா, ட்ரம்ப் வதந்திகளை பரப்புவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இந்த விவகாரம் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கடந்த மாதம் வைரஸ் தோற்றத்திற்கான உண்மையான காரணம் குறித்து கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறினார். இது சீனாவில் உள்ள வுஹான் ஆய்வகத்திலிருந்து கசிந்ததா அல்லது வேறு எங்கிருந்தாவது வந்ததா என்பது குறித்த விசாரணை அறிக்கையை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, US புலனாய்வு அமைப்புகள் இரண்டு சாத்தியமான சூழ்நிலைகளை பரிசீலித்து வருகின்றன. வைரஸ் ஒரு ஆய்வக விபத்தினால் ஏற்பட்டது அல்லது பாதிக்கப்பட்ட விலங்கினத்துடனான மனித தொடர்பிலிருந்து தோன்றியது. ஆனால் இந்த இரண்டு சூழ்நிலைகளில் இதுதான் காரணம் என்று எந்த ஒரு முடிவுக்கும் புலனாய்வு அமைப்பால் வரமுடியவில்லை.
இந்த நிலையில், கொரோனா வைரஸ், சீன ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில், இந்த வைரஸ் முதன்முதலில் வுஹானில் கண்டறியப்பட்டது. அங்கு சீனாவின் பெரிய உயிரியல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் உள்ளது. எனவே, இதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் போது பரவிய ஒரு அமெரிக்க வகை உளவுத்துறை அறிக்கையின்படி, சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் மூன்று ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் மிகவும் நோய்வாய்ப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தது. அவர்கள் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் அமெரிக்க அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வைரஸ் தோற்றம் குறித்து சீனாவுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை என்று யு.எஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டினர். ஆனால் பெய்ஜிங் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.