தனி ஊடகம் துவங்கும் பாக்., சீனா நாடுகள்..!
08 Jun,2021
பெய்ஜிங் : மேலை நாடுகள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதால் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மேலை நாட்டு ஊடகங்களுக்கு சவால்விடும் வகையில் புதிய ஊடகம் ஒன்றை துவங்க முடிவெடுத்துள்ளது.
கத்தார் அல் ஜசீரா, ஆர் டி நெட்வொர்க் என்கிற புதிய ஊடகத்தை தொடங்க இந்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீனாவில் நிதி உதவியில் இந்த ஊடகம் துவங்கப்பட உள்ளது. உலகின் தலைசிறந்த பத்திரிகையாளர்களை தேர்வு செய்து இந்த ஊடகத்தில் பணியமர்த்த இரு நாடுகளும் இணைந்து முடிவெடுத்துள்ளன.
இந்த புதிய ஊடகம் துவங்க பாகிஸ்தானிடம் போதிய நிதி இல்லை. இதனால் சீனாவின் ஆதரவை பாகிஸ்தான் நாடியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றின் எதிர்ப்பை சம்பாதித்த பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளும் ஊடக விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களுக்காகவே ஊடகத்தை உருவாக்கியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.