இந்திய பயணிகள் விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது நெதர்லாந்து
01 Jun,2021
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரம் அடையைத்தொடங்கியதும் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கின. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்தது. இந்த தடையானது ஜூன் 1 ஆம் தேதி வரை இருக்கும் என்று நெதர்லாந்து அரசு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், இந்திய பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நெதர்லாந்து அரசு நீக்கியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பதிவிட்டுள்ளது. எனினும், கொரோனா பெருந்தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து ஐரோப்பிய யூனியனை சாராத பயணிகள் வருவதற்கு ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே விதித்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது.