இந்தியாவுக்காக ‘இவ்வளவு’ கொரோனா நிவாரண நிதிய ‘அள்ளி’ கொடுத்துருக்காருஸ! –
14 May,2021
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக, நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான கொரோனா தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்தியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி மருந்துகள்,ஆக்சிஜன் உபகரணங்கள் போன்ற உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன.மேலும்,பல திரைப்பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் கொரோனா தடுப்பு பணிக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகின் இளம் பணக்காரர்களில் ஒருவரான பிரபலமான கிரிப்டோகரன்சி எத்தேரியத்தின் இணை நிறுவனர் விட்டாலிக் புட்டெரின் கிரிப்டோகரன்ஸியில் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,358 கோடி) கொரோனா நன்கொடையாக அளித்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
புட்டெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ஷிபு டோக்கன்களை க்ரிப்டோகரென்சி மூலம் அனுப்பியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பும், ஏப்ரல் மாதத்தில், புட்டரின் சுமார் 600,000 டாலர் (சுமார் ரூ. 4.41 கோடி) ஈதர் மற்றும் தயாரிப்பாளர் டோக்கன்களை இந்தியா கோவிட் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இவர் அளித்துள்ள இந்த நிதிக்கு, கோவிட் நிவாரண நிதியை இந்திய தொழில்நுட்ப தொழில்முனைவோர் சந்தீப் நெயில்வால் ட்வீட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
அதில், ‘இந்த நிதி பொறுப்புடன் செலவிடப்படும். எந்தவொரு சமூகத்தையும் குறிப்பாக SHIB உடன் தொடர்புடைய சில்லறை சமூகத்தை பாதிக்கும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம்’ எனவும் குறிப்பிடுள்ளார்.