இத்தாலியில் அஸ்ட்ராஸெனெகா- ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வலியுறுத்தல்!
11 May,2021
தலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், முன்னதாக குறித்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டினால், மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.
பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, இத்தாலியும் கடந்த மார்ச் மாதத்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது. இதனால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளின் விநியோகங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன. தற்போது இந்த இரு தடுப்பூசிகளின் பயன்பாடுகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் நன்மைகள் அபாயங்களை விட அதிகமாக இருப்பதாக கூறிய பின்னர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
ஃபைசர்- பயோஎன்டெக் (பி.எஃப்.இ.என்) தடுப்பூசிகளுக்கான முன்பதிவு மே இறுதி வரை நிரம்பியிருந்தாலும், சுமார் 100,000 அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜே அண்ட் ஜே தடுப்பூசிகள் இன்னும் கிடைக்கின்றன,
‘அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நினைவில் கொள்க’ என்று பிராந்திய கொரோனா வைரஸ் நெருக்கடி பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது.