நடுக் கடலில் அமெரிக்கா மடக்கிப் பிடித்த கப்பல் முழுவதும் ஆயுதம் ?
10 May,2021
மொத்தக் கப்பல் முழுக்க ஆயுதங்கள். ராங்கிகளை அழிக்கும் றொக்கட் லோஞ்சர் தொடக்கம் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் கன ரக ஆயுதங்கள் என்று இந்த கப்பல் முழுக்க ஆயுதங்கள் தான். குறித்த கப்பல் ஈரான் நாட்டில் இருந்து யெமன் நாட்டிற்கு சென்று கொண்டு இருந்த வேளை பாக்கிஸ்தான் கடலுக்கு அருகாமையில், வைத்து அமெரிக்க கடல் படை கப்பலை மடக்கியுள்ளது. இதனை அடுத்து நடந்த சோதனையில் பல ஆயுதங்கள் சிக்கியுள்ளது. இவை அனைத்தும் சீனா மற்றும் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள் என்பது தான் மிகவும் அதிர்சியான விடையம். எனவே ஈரான் நாட்டிற்கு ஸ
சீனா மற்றும் ரஷ்யாவே ஆயுத உதவிகளை செய்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் ஒன்று கூட வேற்று நாட்டு ஆயுதங்கள் கிடையாது. இந்த விடையம் தொடர்பாக ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மெளனம் காத்து வருகிறது.