கொரோனா விதிமீறல்; தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்
27 Apr,2021
தாய்லாந்தில், பொது இடத்தில் கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட பிரதமர் பிரயுத் சான்- ஓச்சாவுக்கு, 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆசிய நாடான தாய்லாந்தில் கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக்கப்பட்டு உள்ளன. விதிகளை மீறுவோருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம், தலைநகர் பாங்காக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் பிரயுத் சான்- ஓச்சா, முக கவசம் அணியவில்லை.விதிமீறலில் ஈடுபட்ட பிரதமருக்கு, பாங்காக் மாகாண கவர்னர் அஸ்வின் குவான் முவாங், நேற்று, 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இதுகுறித்து, தன் அதிகாரப்பூர்வ, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள கவர்னர் அஸ்வின், பிரதமர் முக கவசம் அணியாத புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார். பின், அந்த புகைப்படம் அகற்றப்பட்டது.