அமெரிக்காவில் இருந்து 10 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இந்தியாவுக்கு வருகிறது
25 Apr,2021
இந்தியாவில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தற்போதைய தேவைக்கு போதவில்லை. எனவே வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜனை வழங்க மத்திய அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்தியாவில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தற்போதைய தேவைக்கு போதவில்லை. எனவே வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜனை அதிகளவில் ஏற்றி செல்வதற்காக சிங்கப்பூரில் இருந்து 4 கிரையோ ஜெனிக் டேங்கர்கள் ராணுவ விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல ஐக்கிய அரபு நாட்டில் இருந்தும் ஆக்சிஜன் கண்டெய்னர் கொண்டு வரப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் இருந்து 24 நடமாடும் ஆக்சிஜன் தொழிற்சாலை இந்தியாவுக்கு வருகிறது. அமெரிக்காவில் இருந்து 10 ஆயிரம் சிலிண்டர்களை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். சான்பிரான்ஸ்கோ மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இவை கொண்டுவரப்பட இருக்கின்றன.