தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது:
23 Apr,2021
அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன.
தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன.
இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு, பொது மக்களில் 370,000 பேரிடமிருந்து வைரஸ் சோதனைகளை அடிப்படையாகக் கொண்டது.
முதல் ஆய்வில், ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஸெனெகா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளின் ஒற்றை டோஸ் மூலம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு புதிய கோவிட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு 65 சதவீதம் குறைவாக இருந்தது.