இந்திய விமானங்களுக்கு தடை விதித்தது கனடா!
23 Apr,2021
கொரோனா தொற்றை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா 30 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில், கனடாவில் தரையிறங்கிய 100 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் குறைந்தது ஒருவருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இதில் 32 விமானங்கள் இந்தியாவில் இருந்து கனடா வந்தவை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமான சேவைகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
கனடாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் 1.8% பேர்கள் விமான பயணிகள் எனவும், தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து விமான சேவையை ரத்து செய்வதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் என்றே கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.