கரும்கடலில் வேண்டும் என்றே பயிற்ச்சி செய்யும் ரஷ்யா !
15 Apr,2021
எல்லையில் தனது துருப்புகளை குவித்துள்ள ரஷ்யா, அமெரிக்க கடல் படை கருங்கடலுக்கு வருவதை தடுக்க அங்கே போர் பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளதோடு. இது போன்ற போர் பயிற்ச்சியில் வழமையாக பாவிக்கும் டம்மி, ஆயுதங்களுக்கு பதிலாக உண்மையான ஆயுதங்களை பாவித்து வருகிறது. இதனால் நிஜமான ஏவுகணைகளை ஏவி கடலில் பெரும் போர் பயிற்ச்சியில் ரஷ்யா தற்போது ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் 2 நாசகாரி கப்பல்கள் கருங்கடலை அண்மித்து வரும் நிலையில், ரஷ்யா இவ்வாறு வேண்டும் என்றே பெரும் போர் பயிற்ச்சி ஒன்றில் இறங்கியுள்ளமை பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய போர் கப்பல்கள் ஏவும் ஏவுகணைகள் கடலில் வீழ்ந்து வெடித்து வண்ணம் உள்ளதாக சற்று முன்னர் சி.என். என் செய்தி வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க யூக்கிரேன் நாடு, முழு அளவில் ஒரு பெரும் போருக்கு தயாராகி வருகிறது. அன் நாட்டின் 50 சதவிகிதமான ராணுவத்தினர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.