ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளுக்கிடையே பயண கட்டுப்பாடுகள் விலக்கு
08 Apr,2021
கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு விமானத்தில் வரும் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்து வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இருக்காது என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆன்ட்ரேன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலிய செல்லும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விலக்கி கொண்டிருந்தது.
இதையடுத்து வரும் ஏப்ரல் 19-ம் தேதி முதல் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா நாடுகளில் எந்த பகுதிக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இருநாட்டு பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விமான பயணிகள் பயணம் செய்யும் பகுதி கொரோனா தொற்று அதிகம் உள்ள இடமாக இருந்தால் அவர்கள் பயணத்தை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதனுடன் கொரோனா பாதித்த பகுதிகளிலிருந்து அவர்கள் பயணம் செய்தால் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அவர்கள் மீது விதிக்கப்படும் என்று நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.