ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும்!
08 Apr,2021
ஸ்பெயினில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஏற்கனவே அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படுமா? என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என கூறினார்.
இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியை பயன்படுத்துவது விவாதப் பொருளாகியுள்ளது.
இதனால், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் தடுப்பூசி பயன்பாட்டை வயதானவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தியுள்ளது.
இதனிடையே ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியால் அரிதான அளவு பக்க விளைவுகளே ஏற்படும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, சுமார் 34 இலட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதில் 169 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக பதிவு செய்துள்ளது.