கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அரசு கூறியிருந்த நிலையில் உண்மையில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி மாலியின் Bounti கிராமத்தில் பிரான்ஸ் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அரசு கூறியிருந்த நிலையில் உண்மையில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நா விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 3ம் திகதி மாலியின் Bounti கிராமத்தில் பிரான்ஸ் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
மறுநாள் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், Bounti கிராமத்தில் MQ-9 ட்ரோன்கள் வழிகாட்டுதலின் படி பிரான்ஸின் இரண்டு Mirage 2000 ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஆயுதமேந்திய தீவிரவாத குழுவைச் சேர்ந்த 40 ஆண்கள் கொல்லப்பட்டனர் என அறிவித்தது.
இதைத்தொடர்ந்து ஜனவரி 10ம் திகதி நேர்காணல் ஒன்றில் பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly, தாக்குதல் நடந்த பகுதியில் திருமண விழா நடைபெறவில்லை மற்றும் பெண்கள், குழந்தைகள் என யாரும் அப்பகுதியில் இல்லை என உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில். ஜனவரி 3 தாக்குதல் குறித்து மாலியில் உள்ள ஐக்கிய நாடு சபையின குழுவான MINUSMA மேற்கொண்ட விசாரணையில், 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கண்டறிப்பட்டுள்ளது.
தாக்குதல் குறித்து ஜனவரி 21ம் திகதி மாலியில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு குழு வெளியிட்ட அறிக்கையிலும் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து MINUSMA வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரான்ஸ் நடத்திய தாக்குதல் திருமண விழாவில் பங்கேற்றவர்களை குறிவைத்து நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து 115 பேரை நேருக்கு நேர் உட்பட மொத்தம் 400 மேற்பட்டோரை நேர்காணல் செய்ததாகவும், அதன் மூலம் இந்த திடுக்கிடும் உண்மையை உறுதிப்படுத்தியதாக MINUSMA அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு மாதம் திட்டமிடப்பட்டிருந்த திருமண விழாவில் கலந்துக்கொள்ள 100 மேற்பட்டோர் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து வந்துள்ளனர்.
அவர்களில் ஐந்து பேர் ஆயுதமேந்தி இருந்துள்ளனர், அவர்கள் Katiba Serma போராளிகள் குழுவின் உறுப்பினர்கள் என கருதப்படுகிறது.
Katiba Serma போராளிகள் குழுவிற்கு அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருப்பதாக என புரளி பேசப்படுகிறது.
தாக்குதலுக்கு முன்னரே ஆயுதமேந்திய 2 பேர் சம்பவயிடத்திலிருந்து புறப்பட்டுவிட்டனர் மற்ற 3 பேர் தாக்குதல் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், அவர்களுடன் பொதுமக்கள் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என MINUSMA அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஹெலிகாப்டர் மூலம் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக MINUSMA மேற்கொண்ட விசாரணையில் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலில் Mirage 2000 ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் முரணாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.