இளைஞர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி வேண்டாம்.. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து.. கனடா ' நாட்டிலும் தடை
31 Mar,2021
மிக தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கனடா நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் 55 வயதுக்குக் கீழானவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன.
உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கொரோனாவும் பொதுமக்கள் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு அளிப்பதை வேகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் தடை
ஐரோப்பிய நாடுகளில் தடை
ஆக்ஸ்போர்டு ஆரயாச்சியாளர்களும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியே தற்போது பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடுப்பூசி தான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்தத் தடுப்பூசி ரத்த உறைத்தல் பிரச்னையை ஏற்படுத்துவதாகக் கூறி, முதலில் சில ஐரோப்பிய நாடுகளில் வயதானவர்களுக்குத் தடுப்பூசி விதிக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு ஆஸ்போர்ட் தடுப்பூசி பாதுகாப்பானது என்று தொடர்ந்து உறுதி அளித்தது.
கனடாவிலும் தொடரும் தடை
கனடாவிலும் தொடரும் தடை
இந்நிலையில், கனடாவின் ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்துள்ளன. 55 வயதிற்குக் குறைவானவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை அளிக்க வேண்டாம் என்று அம்மாகாண சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 55 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசியைத் தொடர்ந்து அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
காரணம் என்ன?
55 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு இந்த தடுப்பூசியை அளிக்கும்போது அபூர்வமான, ஆனால் மிகவும் தீவிரமான பக்கவிளைவு ஏற்படுவதாகவும் இதன் காரணமாகவே தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படுவதாகச் சுகாதார துறையினர் தெரிவித்தனர். கனடாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்த முடிவுக்கு அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி பணிகள்
தடுப்பூசி பணிகள்
ஏற்கனவே, கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. கனடாவில் தற்போது வரை 1.8% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளை விட மிகக் குறைவு ஆகும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.