விமானத்தில் ஏறும்போது கீழே விழுந்த பைடன்
20 Mar,2021
விமானத்தில் ஏறும்போது கால் இடறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று முறை விழுந்தார். ஆனால் 'அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை; நலமாக உள்ளார்' என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 78 வஷிங்டனில் இருந்து அட்லாண்டாவுக்கு செல்வதற்காக சிறப்பு விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.விமானத்தில் ஏற முயன்றபோது மூன்று முறை தடுமாறி கீழே விழுந்தார். சுதாரித்து எழுந்த அவர் பயணத்தை தொடர்ந்தார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீனா ஜீன் பியரி கூறியதாவது:ஜோ பைடன் விமானத்தில் ஏற முயன்றபோது பலத்த காற்று வீசியது. அதனால் கால் இடறி அவர் விழுந்திருக்கலாம். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. நல்ல உடல் நலத்துடன் உள்ளார். வழக்கமான பணிகளை கவனிக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்தாண்டு நவ.ல் அதிபர் பதவிக்கு தேர்தல் முடிந்த நிலையில் தன் வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்போது ஜோ பைடன் கீழே விழுந்து காலில் அடிப்பட்டது.