2020ஆம் ஆண்டில் பொதுவாக எதிர்பார்க்கப்பட்டதை விட 7 சதவீதம், அதிகமான இறப்புகளை பிரித்தானியா பதிவுசெய்துள்ளது.
இது ஐரோப்பாவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகள் காட்டுகின்றன.
பிரித்தானியாவிற்குள், இங்கிலாந்தின் இறப்பு வீதம் ஆண்டு முழுவதும் எதிர்பார்த்த அளவை விட 8 சதவீதம், ஸ்கொட்லாந்தில் 6 சதவீதம், வடக்கு அயர்லாந்து 5 சதவீதம் மற்றும் வேல்ஸ் 4 சதவீதம் ஆகும்.
2020ஆம் ஆண்டு இலையுதிர்கால அலைகளின் போது, போலந்து, ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருந்தன.
தேசிய புள்ளிவிபரங்களுக்கான தரவுகள், இந்த ஆண்டு பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகள் மூன்றாவது கொரோனா வைரஸை அனுபவித்ததில் ஏற்பட்ட இறப்புகளை உள்ளடக்குவதில்லை.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டதோடு 101பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 42இலட்சத்து 85ஆயிரத்து 684பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 026பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 38ஆயிரத்து 165பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 879பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 36இலட்சத்து 21ஆயிரத்து 493பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 73பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை 26இலட்சத்து 45ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 16ஆயிரத்து 557பேர் பாதிக்கப்பட்டதோடு 195பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 68ஆயிரத்து 413பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 848பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 24இலட்சத்து ஆயிரத்து 700பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 216பேர் பாதிக்கப்பட்டதோடு 27பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 27ஆயிரத்து 064பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 617பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 33ஆயிரத்து 399பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 587பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 71ஆயிரத்து 048பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இஸ்ரேலில் எட்டு இலட்சத்து 728பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் இஸ்ரேலில், இதுவரை மொத்தமாக எட்டு இலட்சத்து 26ஆயிரத்து 609பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக ஆறாயிரத்து 73பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 47பேர் பாதிக்கப்பட்டதோடு 4பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19ஆயிரத்து 808பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 557பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.