அவுஸ்ரேலியாவில் 37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்
07 Mar,2021
அவுஸ்ரேலியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்று உறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் 37 ஆவது நாளாக தொடர்ந்தும் அங்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் எவ்வித மரணங்களும் பதிவாகவில்லை.
எல்லை மூடல் மற்றும் பயணிகளுக்கான கட்டாய தனிமைப்படுத்தல், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன அந்நாட்டின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதேவேளை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை அடுத்து அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தாமதமடைந்துள்ளன.
பைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் கடந்த மாத இறுதியில் ஆரம்பமாகிய அதேவேளை அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இம்மாத இறுதிக்குள் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.