பிரேஸிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் தடுப்பூசி மருந்தான சினோபார்ம் போதிய கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சினோபார்ம் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.
ரஷ்ய – சீன தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்க்க வேண்டும்- கிளெமென்ற் பியூன்
ரஷ்யா அல்லது சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பயன்படுத்த வேண்டாம் என பிரான்சின் ஐரோப்பிய விவகார அமைச்சர் கிளெமென்ற் பியூன் (Clement Beaune) கோரியுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி மற்றும் சீனாவின் சினோபார்ம் ஆகிய தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்களால் இதுவரை அங்கீகரிக்கப்படாத நிலையில் அவற்றைப் பயன்படுத்துவது பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பியூன் எச்சரித்துள்ளார்.
மத்திய ஐரோப்பாவில் சில உறுப்பு நாடுகள் ஏற்கனவே ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பூசிகளை வாங்கியுள்ளமை அல்லது வாங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றமையை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை தடுப்பூசி கொள்முதல் மையமாக இருந்தது. ஆனால், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஹங்கேரி, சுலோவாக்கியா மற்றும் செக் குடியரசில் ஒப்புதலுக்காக மதிப்பிடப்படுகிறது.
ஹங்கேரி ஏற்கனவே சினோபார்ம் மற்றும் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகளை மக்களுக்குப் போடத் தொடங்கியுள்ளது. போலந்தும் சீனாவின் தடுப்பூசியை வாங்குவது குறித்து விவாதித்துள்ளது.
எனவே. இவ்வாறான கொள்வனவுகள், ஒன்றியத்தின் ஒற்றுமையில் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும், அதுவும் சுகாதார ஆபத்துப் பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஐரோப்பாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. எனினும், ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த தடுப்பூசியை கொள்வனவு செய்து சேமிப்பதற்கான கட்டாயம் இல்லையென்த தெரிவிக்கப்பட்டுள்ளது.