அவுஸ்ரேலியாவுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தியது இத்தாலி!
06 Mar,2021
இந்த முடிவு இத்தாலியில் உள்ள அஸ்ட்ராஸெனெகா மையத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் 250,000 அளவுகளை பாதிக்கிறது.
தடுப்பூசிகளை வழங்கும் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் ஏற்றுமதியை நிறுத்த அனுமதிக்கும் என புதிய விதிமுறைகளைப் பயன்படுத்திய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
எனினும், ஒரு தொகுதி ஏற்றுமதியை இழப்பது அதன் வெளியீட்டை மோசமாக பாதிக்காது என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஆணையம் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உறுப்பு நாடுகளுக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட விநியோகத்தில் 40 சதவீதத்தை மட்டுமே வழங்க அஸ்ட்ராஸெனெகா ஒப்புக்கொண்டுள்ளது.