பொது முடக்கத்தை நீட்டித்து பிரான்ஸ்
05 Mar,2021
பிரான்ஸ் பிரதமர் Jean Castex, வார இறுதி பொது முடக்கம் சனிக்கிழமையிலிருந்து Pas-de-Calais பகுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், Hautes-Alpes, Aisne மற்றும் Aube ஆகிய பகுதிகளில் அதிக கொரோனா பரவல் காணப்படுவதையடுத்து அவையும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள 23 பகுதிகளில் உள்ள பெரிய அத்தியாவசியமற்ற மற்றும் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யாத 10,000 சதுர அடிக்கு அதிகமான இடப்பரப்பு கொண்ட கடைகள் மூடப்பட உள்ளன.
தற்போது பிரான்சில் பரவும் கொரோனா தொற்றில் 60 சதவிகிதத்துக்கும் அதிகம் பிரித்தானிய வகை கொரோனாவால்தான் ஏற்படுவதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் பிரதமர் Jean Castex, கடந்த 15 நாட்களாக பிரித்தானிய வகை கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது பொதுமுடக்கத்தை தவிர்ப்பதற்காக அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார் அவர்.