நைஜீரியா உணவகத்தில் மனித மாமிசத்தை சமைத்து விற்று வந்த பெண்: கதிகலங்க வைக்கும் புகைப்படங்கள்!
04 Mar,2021
மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்று வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தில் உணவகம் நடத்தி வந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று நைஜீரிய, இதற்கு முக்கிய காரணங்கள் வஹட்சி, பஞ்சம், ஏழ்மை ஆகும்.

இந்நிலையில், அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள குறிப்பிட்ட உணவகத்தில் மனித இறைச்சி விற்கப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, திடீரென பொலிசார் உணவகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது மனித இறைச்சி விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட சடலத்தையும், சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், உணவகத்தை நடத்தி வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டரா அல்லது அது இறந்தவர்களின் உடலா என்பது குறித்த தகவலை பொலிசார் வெளியிடவில்லை.
2015 ஆம் ஆண்டு இதே அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்கப்பட்டதை பொலிசார் கண்டுபிடித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.