சமூக ஊடகங்களில் காட்டப்படும் வீடியோக்களின்படி ஆங்காங்கே ரத்தம் தோய்ந்த உடல்கள் கிடக்கின்றன, மருத்துவ உதவிக்குழுக்கள் இவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்கின்றனர்.
யாரும் உத்தரவு போடவில்லை, நாங்கள் விரும்பித்தான் சுட்டுத்தள்ளுகிறோம், இது எங்கள் விருப்பம்: போராட்டக்காரர்களிடம் மியான்மர் போலீஸ்ஷீல்டு வைத்து போராட்டக்காரர்கள் பாதுகாப்பு. | மியான்மர் பிப்.28, 2021
மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சியை எதிர்த்து அங்கு ஜனநாயக சக்திகள் மக்கள் போராட்டங்களைக் கையிலெடுத்து வருகின்றனர். இந்த போராட்டங்களை மியான்மர் ராணுவ ஆட்சி ஈவு இரக்கமில்லாமல் ரத்தக்களறி கொலைவெறித்தாக்குதலில் அடக்கி ஒடுக்கி வருகிறது.
பிப்ரவரி 28ம் தேதியான நேற்று ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் சூடுபிடிக்க மியான்மர் ராணுவம் தனது ரத்த வேட்டையை நடத்தியது. யாங்கூனில் இண்டெர்நெட் நெட்வொர்க் பொறியாளர் நயி நயி ஆங் ஹிடெட் நைங் என்ற நபர் ராணுவத்தினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட அது வைரலாகப் பரவியது.
பிப்ரவரி 18ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 18 பேர் பலியானதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. ராணுவப்புரட்சிக்குப் பிறகே இதுவரை 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிப்.28ம் தேதி வன்முறை அதனையடுத்த துப்பாக்கிச் சூடு குறித்து மியான்மர் ராணுவ அதிகாரிகள் எந்தத் தகவலையும் அளிக்க மறுத்துள்ளனர்.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது முதல் ஜனநாயகத்தை மீட்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனை ராணுவம், போலீஸ் அடக்கி ஒடுக்கி வருகிறது. இந்நிலையில்தான் நெட்வொர்க் பொறியாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது நட்ட நடு ரோடில் சுட்டுக் கொல்லப்பட்டார். கையில் செல்போனுடன் அவர் உடல் ரத்த வெள்ளத்தில் யாங்கூன் நகரில் கிடந்தது அங்கு பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.
இவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க பலரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இவரது பிணத்தைக் கடந்தே சென்றார்கள், அதில் தைரியமான ஒரு 5 பேர் இவரது உடலைத் தூக்கிச் சென்றனர்.
இவர் தவிர நேற்று மேலும் 5 பேர் நாய் போல் சுட்டுக் கொல்லப்பட்டு தெருவில் கடாசப்பட்டதுதான் நடந்துள்ளது. ஒருவருக்கு கண்ணில் தோட்டா தாக்கியது, பள்ளி ஆசிரியர் ஒருவர் கிரெனேட் வெடிப்பில் அதிர்ச்சியில் மாரடைப்பினால் காலமானார்.
நாடு முழுதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளாஸ்டிக் ஹெல்மெட், முகக்கவசம் அணிந்து மியான்மர் ராணுவம் மற்றும் போலீசாரை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாவேய் என்ற கடற்கரை ஊரில் போலீஸார் நட்ட நடுச்சாலையில் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைவெறித்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இன்னொரு நபர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது சுடப்பட்டார். அவர் ஹெல்மெட்டும் அவரைக் காப்பாற்றவில்லை தோட்டா ஊடுருவியதில் ஹெல்மெட்டும் தலையும் ரத்தச் சிவப்பாக மாறியதை மக்கள் பார்த்து பீதியில் உறைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் காட்டப்படும் வீடியோக்களின்படி ஆங்காங்கே ரத்தம் தோய்ந்த உடல்கள் கிடக்கின்றன, மருத்துவ உதவிக்குழுக்கள் இவர்களை ஆம்புலன்ஸில் கொண்டு செல்கின்றனர்.
போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்தும் மக்களிடத்தில் “எங்களுக்கு சுடுமாறு உத்தரவில்லை நாங்கள்தான் சுட்டுத்தள்ளுகிறோம், மேலும் சுட்டுத் தள்ளுவோம் இது எங்கள் விருப்பம் சாக வேண்டாம் என்று விரும்பினால் வீட்டுக்குள் சென்று விடுங்கள்” என்று கூறியதை நேரில் பார்த்ததாக பத்திரிகையாளர் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருப்பது மியான்மரில் உள்ள நிலைமைகளை வெட்ட வெளிச்சமாக பறைசாற்றுகிறது.