இத்தாலியில்  கொரோனாஎண்ணிக்கை - 29 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை
                  
                     27 Feb,2021
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	 
	அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.
	 
	இந்நிலையில், இத்தாலி நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்து 07 ஆயிரத்து 825 ஆக உள்ளது.
	 
	அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 97 ஆயிரத்து 507 ஆக உள்ளது.
	 
	மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.98 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.11 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்