கான்பெரா:ஆஸ்திரேலியாவில், 'பேஸ்புக், கூகுள்' போன்ற, சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு, அந்நிறுவனங்கள், உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதா, அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேறியது.
ஆஸ்திரேலிய பார்லி.,யில், செய்தி ஊடக பேர மசோதா, சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. 'கூகுள், பேஸ்புக்' போன்ற, இணையவழி, சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில், ஒரு பகுதியை, ஆஸ்திரேலிய செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதை, இம்மசோதா கட்டாயம் ஆக்குகிறது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அந்த நாட்டின் ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்கின் துாண்டுதலே காரணம் என கூறப்படுகிறது. இந்த புதிய சட்டத்துக்கு உடன்படாத, 'பேஸ்புக்' நிறுவனம், ஆஸ்திரேலியாவில், 'பேஸ்புக்'கில், செய்திகளுக்கு, அதிரடியாக தடை விதித்தது. இதன் காரணமாக, 'பேஸ்புக்'கில் வெளியாகும் செய்திகளை, ஆஸ்திரேலிய மக்கள் பார்க்கவும், பகிரவும் முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஆஸ்திரேலியா குறித்த செய்திகளை, வேறு எந்த நாட்டின், 'பேஸ்புக்' தளத்திலும், பார்க்க முடியாத நிலை உருவானது.
இந்த நடவடிக்கைக்கு, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மோரீசன் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, பேஸ்புக் நிறுவனத்துடன், ஆஸ்திரேலிய அரசு பேச்சு நடத்தியது. அப்போது, பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற, ஆஸ்திரேலிய அரசு, சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள சம்மதித்தது.இதையடுத்து, ஆஸ்திரேலியாவில், பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, விலக்கிக் கொள்ளப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், திருத்தம் செய்யப்பட்ட, செய்தி ஊடக பேர மசோதா, ஆஸ்திரேலிய பார்லி.,யில், நேற்று நிறைவேற்றப்பட்டது.மியான்மர் ராணுவத்துக்கு'பேஸ்புக்'கில் தடைநம் அண்டை நாடான மியான்மரில், ராணுவ புரட்சி வெடித்துள்ளதை அடுத்து, அந்நாட்டு ராணுவத்துடன் தொடர்புள்ள அனைத்து, 'பேஸ்புக்' கணக்குகளுக்கும், அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள, நிறுவனங்களின் விளம்பரங்களுக்கும், பேஸ்புக் தடை விதித்துள்ளது.
மியான்மரில் ஏற்பட்ட ராணுவ புரட்சியை, அவசர நிலையாக கருதுவதாலும், ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய பின், அடுத்தடுத்து அந்நாட்டில் அரங்கேறும் வன்முறை சம்பவங்களை மனதில் வைத்தும், இந்த தடை விதிக்கப்பட்டுஉள்ளதாக, பேஸ்புக் அறிவித்துள்ளது.