இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம்!
19 Feb,2021
கிழக்கு ஆசியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அறியப்படும் இந்தோனேசியாவில் கொவிட்-19 தடுப்பூசியை போட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ஜகர்த்தா ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இதுகுறித்து ஜகர்த்தா ஆளுநர் அகமத் ரிசா கூறுகையில், ‘ஜகர்த்தா குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தைப் போட மறுத்தால் 356.89 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா ஃபைஸர் மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துகளை செலுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.