பெருவில் கொவிட்-19 தடுப்பூசி ஊழல்: வெளியுறவுத் துறை அமைச்சர் இராஜினாமா!
16 Feb,2021
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் இரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தால் பெருவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இதுகுறித்து எலிசபெத் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது தவறான செயல். நான் இரண்டாவது டோஸை எடுத்து கொள்ள போவதில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் கொவிட்-19 தொற்றால் அதிகபாதிப்பை சந்தித்த நாடுகளில் ஒன்றான பெருவில், பெப்ரவரி 8ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பு மருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்படு வருகிறது.