மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது.இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சன் சூச்சி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்டோர், வீட்டு காவலில் சிறைபிடிக்கப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில் ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மியான்மர் ராணுவம் தனது அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மியான்மரில், ஆங் சன் சூச்சியின் வீட்டுக்காவல், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி, அமோக வெற்றி பெற்று, ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. தேர்தலில், பல்வேறு முறைகேடுகள் செய்து, ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக, ராணுவம் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, கடந்த, 1ம் தேதி, ஆட்சி அதிகாரத்தை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. ஆளும் கட்சி தலைவர் ஆங் சன் சூச்சி, அதிபர் வின் மியின்ட் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களை, ராணுவத்தினர் வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதற்கிடையே, ராணுவ ஆட்சியை திரும்பப் பெற வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும், மியான்மர் மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆங் சன் சூச்சியின் வீட்டுக்காவல், நேற்றுடன் முடிவதாக இருந்த நிலையில், அதை நாளை வரை நீட்டித்து, ராணுவம் அறிவிப்பு வெளியிட்டது.'வாக்கி டாக்கி' எனப்படும், தகவல் தொடர்பு கருவிகளை முறைகேடாக வாங்கியதாக, சூச்சி மீது புகார் உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், நாளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சூச்சி ஆஜராக உள்ளார்.