சீனாவில் பிறப்பு விகிதம் 30% குறைந்தது அதிர்ச்சியூட்டும் தகவல்
10 Feb,2021
சீனாவில் பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கை என்ற கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டு விதி பின்பற்றபட்டது. இதனால், நாட்டில் வயதானவர்கள் அதிகமாகவும், குழந்தைகள் மற்றும் உழைக்கும் மக்கள் தொகை குறைய தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துதற்காக கடந்த 2016 ஆண்டு முதல் ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதியளித்து விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.
ஆனால், நாட்டின் கடுமையான குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையில் தளர்வுகள் ஏற்படுத்தியும் கடந்த 4 ஆண்டுகளாக பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளள்ளது.
2020-ல் சீனாவில் 1.04 கோடி குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.
இது குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் சீனாவின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மக்கள்தொகை வல்லுநர்கள் சீனாவின் இரண்டு குழந்தைகளின் கொள்கைக்கு மக்கள்தொகை எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த மேலும் 15 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.