இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்று விட்டு தப்பி ஓடிய பெண் புலிகள்
08 Feb,2021
இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் சிங்கா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. இங்கு அழிந்து வருகிற சுமத்ரா இன புலிகள் இருந்து வந்தன.
இந்தநிலையில் அங்கு பல நாட்கள் இடைவிடாது பெய்த மழையால், புலிகள் வசிப்பிடம் சேதம் அடைந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம், அங்கிருந்து 2 சுமத்ரா புலிகள் தங்களது பராமரிப்பாளரை கடித்துக்குதறிவிட்டு அங்கிருந்து தப்பின.
தப்பிய புலிகள் இரண்டும் பெண் புலிகள். 18 வயதானவை. தப்பி ஓடிய புலிகளில் ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டு விட்டது.
மற்றொரு புலி மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால், அது சுட்டுக்கொல்லப்பட்டது.
புலிகளால் கடித்துக் குதறப்பட்ட உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் சம்பவ இடத்தில் இறந்து கிடந்தார். அவரது உடலில், புலிகள் கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.