சர்வதேச அமைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தும் சீனாவை அமெரிக்கா பொறுப்பேற்க வைக்கும்;
06 Feb,2021
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரு நாட்டின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது இதுவே முதல் முறை. இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘சீனாவின் ஜின்ஜியாங், திபெத் மற்றும் ஹாங்காங்கில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளுக்காக அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும் என்பதை ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தினார். மேலும் மியான்மரில் நடந்த ராணுவ சதித்திட்டத்தை கண்டித்து சர்வதேச சமூகத்தில் சேர சீனாவுக்கு அவர் அழுத்தம் கொடுத்தார்’’ எனக் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியுடன் நடந்த உரையாடல் குறித்து ஆண்டனி பிளிங்கன் குறிப்பிடுகையில் ‘‘சீனப் பிரதிநிதியுடனான எனது உரையாடலில் அமெரிக்கா தனது தேசிய நலன்களை பாதுகாக்கும், ஜனநாயக மதிப்புகளுக்காக எழுந்து நிற்கும் மற்றும் சர்வதேச அமைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தியதற்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் என்பதை நான் தெளிவு படுத்தினேன்’’ என்றார்.