நவல்னிக்கு ஆதரவு தெரிவித்த 3 நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுகிறது ரஷ்யா!
06 Feb,2021
எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம்சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதுவர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி ஜோசப் பொரெல், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டத்தை பதிவு செய்த ஜோசப் பொரெல் பதிவுசெய்தார்.
நவல்னியின் சிறைவாசம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல மேற்கத்திய நாடுகளிடமிருந்து வெகுஜன நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் தூண்டியுள்ளது.