தீவிரமானதீவிரமான புதுவகைக் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்
06 Feb,2021
தீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அதிக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய, தீவிரமான புதுவகைக் கொரோனாக்களை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
அதற்காக, தீநுண்மிகளின் மரபணு உருமாற்றப் போக்குகளைக் கண்டறியும் வசதியை அதிக நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டங்களின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும்.
அந்த இலக்கை எட்டுவதற்காக, தற்போது போட்டியிடும் மருந்து நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தடுப்பூசி தயாரிப்பை மிகப் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும்’ என கூறினார்.