அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தது, இரண்டாம் உலகப்போரில் திருடப்பட்ட ஹிட்லரின் கழிப்பறை இருக்கை..ஒரு அமெரிக்க சிப்பாயால் பெர்கோஃப் நகரில் உள்ள சர்வாதிகாரியின் குளியலறையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. பவேரிய ஆல்ப்ஸில் நடந்த போரில் ஹிட்லர் பின்வாங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் மிகவும் விநோதமான நினைவுச்சின்னங்களில் ஒன்றான அடோல்ஃப் ஹிட்லரின் (Adolf Hitler) கழிப்பறை இருக்கை (toilet seat) ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த இருக்கை சுமார் £15,000 -க்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பின்படி 13 லட்சத்திற்கு மேல் இதன் விலை உள்ளது. இது ஒரு அமெரிக்க சிப்பாயால் பெர்கோஃப் நகரில் உள்ள சர்வாதிகாரியின் குளியலறையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. பவேரிய ஆல்ப்ஸில் நடந்த போரில் ஹிட்லர் பின்வாங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது இந்த இருக்கை அலெக்சாண்டர் ஹிஸ்டாரிக்கல் ஆக்சன்ஸ் மூலம் ஏலத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான சினத்தின் ஆரம்ப ஏலம் 5,000 யூரோ அல்லது சுமார் 3,642 யூரோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இரண்டாம் உலகப் போரின் நினைவுச்சின்னங்களின் தொகுப்பில் ஒருவர் சேர்க்கக்கூடிய கண்களைக் கவரும் பொருட்களில் ஒன்று' என்று ஏலதாரர்கள் கழிப்பறை இருக்கையை குறித்து விவரித்துள்ளனர். மூடி, இருக்கை என இரண்டு துண்டுகளை கொண்ட இந்த கழிப்பறை இருக்கை மரத்தால் ஆனது.
கழிப்பறை இருக்கையின் நீளம்19 அங்குலங்கள் என்றும் 16 அங்குல அகலம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இரண்டு துண்டுகளும் குரோம் எஃகு பொருத்துதல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஹிட்லர் ஜெர்மனி தேசத்தின் ராணுவத்தில் சேர்ந்து முதல் உலகப்போரில் பங்கேற்றவர். ஜெர்மனியின் தோல்விக்கு யூதர்கள்தான் காரணம் என்று முடிவெடுத்தவர். ஜெர்மனில் தேசிய வெறியை ஊட்டுவதில் அவருடைய பேச்சாற்றலும், அவரை பற்றிய போலி பிம்பமும் அவருக்கு உதவியாக இருந்தது. ஜெர்மன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு சிறிய கட்சியைத் தொடங்கிய ஹிட்லர், ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கினார்.
அந்த சமயத்தில், 1923-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, பவேரியா அரசாங்கத்தை கவிழ்க்க ஹிட்லர் திட்டமிட்டு பிறகு அதில் தோல்வி அடைந்ததால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 263 நாட்களிலேயே அவருக்கு விடுதலை உத்தரவு கிடைத்தது. பவேரியா அரசாங்கத்திற்கு எதிராக நடத்திய தாக்குதலின் கடைசி நாட்களில் குண்டுவெடிப்பால் மோசமாக சேதமடைந்த ஜெர்மனியின் பெர்கோஃப் நகரில் இருந்து ‘உங்களுக்கு என்ன வேண்டும்' என்று மூத்த அதிகாரிகளால் அமெரிக்க சிப்பாய் ரவேன்வால்ட் போர்ச்சிடம் கேட்கப்பட்டது.
அப்போது, பவேரிய ஆல்ப்ஸில் நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் தனிப்பட்ட பின்வாங்கலான பெர்கோஃப் நகரில் இருந்த ஹிட்லரின் படுக்கையறைக்குச் ரவேன்வால்ட் போர்ச் சென்றார். அங்கு முதலாம் உலகப் போரின் கவச உடையையும், இரண்டு ஆயில் பெயின்டிங்களையும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து அவரது கழிப்பறை இருக்கையையும் எடுத்துக் கொண்டார். மேலும், கழிவறை இருக்கையை அகற்றுவதற்கு முன்பு மற்றொரு சிப்பாய் ரவேன்வால்ட்டிடம் "அந்த கழிப்பறை இருக்கையை எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்?" என்று கேட்க, ஹிட்லர் தனது பின்புறத்தை எங்கே வைப்பார் என்று நினைக்கிறீர்கள்? " என ரவேன்வால்ட் பதிலளித்துள்ளாராம்.
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க சிப்பாயால் திருடப்பட்ட அந்த இருக்கை பல ஆண்டுகள் கழித்து தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. மேலும் பல புகைப்படங்கள், போர்ச்சின் சேவை பதிவு, மற்றும் 2001 நியூ ஜெர்சி செய்தி கட்டுரையின் நினைவுச்சின்ன வரலாறு போன்றவையும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த ஏலம் அமெரிக்காவில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.அடால்ஃப் ஹிட்லர் 1933-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என இவர் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவேடுகள் கூறுகின்றன. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.