ரஷ்ய எதிர்கட்சி தலைவர், அலெக்சி நாவல்னியை, இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்க, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ரஷ்யாவில் மீண்டும் போராட்டம் வலுத்துள்ளது.ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி, 44. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வருகிறார். வலுத்து வரும் ஆதரவுஇவரது வசீகரமான பேச்சுக்கும், முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், ரஷ்ய இளைஞர்கள் மத்தியில் ஆதரவு வலுத்து வருகிறது.
இந்நிலையில், அலெக்சி நாவல்னி மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை, புடின் அரசு சுமத்தி வருகிறது.கடந்த, 2014ல், நாவல்னி மீதான ஒரு வழக்கில், அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், ஓராண்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். அதன்பின், அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், வெளிநாடு செல்ல கூடாது என்ற உத்தரவுடன், நாவல்னிக்கு பரோல் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அலெக்சி நாவல்னி, திடீரென மயங்கி விழுந்தார். அவரது உடம்பில், மிகக் கொடிய விஷம் செலுத்தப்பட்டுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.உத்தரவுஉயிருக்கு ஆபத்தான நிலையில், ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் உள்ள மருந்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஐந்து மாதங்கள் சிகிச்சை முடிந்து, சமீபத்தில் ரஷ்யா திரும்பிய போது, அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, நாவல்னியை விடுதலை செய்யக்கோரி, ரஷ்யா முழுதும் போராட்டம் வெடித்தது. லட்சக்கணக்கான மக்கள், சாலையில் போராட்டத்தில் குதித்தனர். வரலாறு காணாத வகையில், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அலெக்சி நாவல்னி, நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டார்.
'வெளிநாடு செல்ல கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அவர் மீறியதால், ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட, சிறை தண்டனையில், இரண்டரை ஆண்டு காலத்தை அனுபவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ரஷ்யாவில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.