அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்த சீனா விருப்பம்
03 Feb,2021
அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
இணையத்தில் உரையாற்றிய சீனாவின் இராஜதந்திர உயர் அதிகாரி யாங் ஜியெச்சி, இரண்டு நாடுகளும் அவற்றின் வேறுபாடுகளைத் தள்ளிவைத்து, நலன்களில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து முதல்முறையாகச் சீன உயரதிகாரி அமெரிக்கர்களிடம் உரையாற்றியுள்ளார்.
வல்லரசு நாடுகளின் போட்டித்தன்மை என்ற காலாவதியான மனோபாத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று நாம் எதிர்பார்ப்பதோடு சீனாவுடன் இணைந்து பணியாற்றி சரியான பாதையில் உறவை பேண வேண்டும் எனவும் ஜியெச்சி அழைப்பு விடுத்துள்ளார்.
சீன முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜியெச்சி அந்நாட்டு கொம்யுனிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினராக உள்ளார்.
ஜோ பைடனின் வெற்றிக்கு கடைசியாக வாழ்த்துத் தெரிவித்த உலகத் தலைவர்களில் ஒருவராக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உள்ளார்.
அமெரிக்காவின் புதிய நிர்வாகம், வர்த்தகம் மற்றும் மனித உரிமை விவகாரத்தில் சீனா மீது தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகிறது