சேம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
29 Jan,2021
கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சேம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால். மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சேம்பியாவில் 50ஆயிரத்து 319பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 96ஆவது நாடாக விளங்கும் சேம்பியாவில் இதுவரை 705பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 843பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 492பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 42ஆயிரத்து 771பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.