கொரோனா விசாரணைக் குழுவைச் அடக்கும் சீன அரசு
28 Jan,2021
கொரோனா வைரஸ் எப்படி, எங்கு தொடங்கியது என்று விசாரணை செய்ய உலகச் சுகாதார அமைப்பு அதிகாரிகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ள நிலையில் வைரஸ் தொடங்கிய இடமான வுகான் நகர வைரஸ் பாதிப்பு மக்கள் உலகச் சுகாதார அமைப்பு விசாரணை அதிகாரிகளைச் சந்திக்க துடித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சீனா இவர்களை மவுனச் சிறைக்குள் தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
சீன குடிமகனான ஷாங் ஹாய் என்பவர் தன் தந்தையை கொரோனாவுக்கு இழந்தார். இவர் உலகச் சுகாதார அமைப்பு அதிகாரிகளைச் சந்திக்க துடிக்கிறார், ஆனால் இவர் போன்ற ஆயிரக்கணக்கானோரை சீனா வாயை அடைத்து மௌனமாக்கியுள்ளது. குறைந்தபட்சம் 80 முதல் 100 சீனர்கள் ‘வீ சாட்’ குரூப் மூலம் வுகான் அதிகாரிகள் சிலர் மீது கடும் புகார்களை எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவாரங்களுக்கு முன்பாக இந்த குழுவே எந்த வித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டுள்ளது.
“இந்த வீ சாட் குழுவை சீன அதிகாரிகள் கண்காணித்தனர். ஏன் அவர்கள் இந்தக் குழுவையே நீக்க வேண்டும்? அவர்கள் பதற்றமடைவதைத்தான் இது காட்டுகிறது. உலகச் சுகாதார நிபுணர்களுடன் இந்த குழுவினர் சந்தித்து விடுவார்களோ என்று சீன அரசு அஞ்சுகிறது” என்கிறா ஷாங் ஹய்.
கடந்த ஓராண்டாக கொரோனா தொற்றுக்கு சீனாதான் காரணம் என்பதை வெளியில் கொண்டு வர இவர் ஆட்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார், ஆனால் சீன அரசு ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்தது.
வுகான் மக்கள் சீன அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தனர், ஆனால் கோர்ட் வழக்குகளை ஏற்க மறுத்து நிராகரித்தது, ஷாங் ஹய் விசாரிக்கப்பட்டார், சில சமயங்களில் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மிரட்டப்பட்டனர்.“எங்கள் அனுபவங்களை உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரிகள் எங்கள் அனுபவங்களையும் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் உறவினர்களையும் விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல் விசாரிக்கிறேன் பேர்வழி என்று விசாரித்தால் அது நிச்சயம் கண் துடைப்பாகவே போய் முடியும், உலகை முட்டாளாக்கவே செய்யும் முயற்சியாக முடியும்” என்கிறார் ஷாங் ஹய் ஆங்கில ஊடகம் ஒன்றில்.