ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
28 Jan,2021
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏழு இலட்சத்து 18ஆயிரத்து 612பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 174பேர் பாதிக்கப்பட்டதோடு 77பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38ஆயிரத்து 197பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 25பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை ஆறு இலட்சத்து 62ஆயிரத்து 400பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.