நெதர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது!
25 Jan,2021
நெதர்லாந்தில் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐன்ட்ஹோவனில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலகப் பிரிவு பொலிஸார், நீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
சில எதிர்ப்பாளர்கள் பட்டாசுகளை வீசி, பல்பொருள் அங்காடிகளை சூறையாடி, கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் சிறிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
வடக்கு கிராமமான உர்க்கில் சனிக்கிழமை மாலை ஒரு கொவிட்-19 சோதனை மையமும் அமைக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அமுல்படுத்தப்பட்ட 21:00 முதல் 04:30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நெதர்லாந்தில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவாகும். இதை மீறுபவர்களுக்கு 95 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்