பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
21 Jan,2021
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் பத்தாயிரத்து 42பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 32ஆவது நாடாக விளங்கும் பிலிப்பைன்ஸில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து ஐந்தாயிரத்து 939பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 862பேர் பாதிக்கப்பட்டதோடு, 64பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 28ஆயிரத்து 904பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 727பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 66ஆயிரத்து 993பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.