அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது – ரஷ்ய அரசாங்கம்
20 Jan,2021
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செய்ய முடியாது என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இதுகுறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் உள்நாட்டு விவகாரம் எனவும், இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நச்சுத்தாக்குதலால் கோமா நிலைக்குச் சென்று, ஜேர்மனியில் சிகிச்சைக்குப் பின்னர், அலெக்ஸி நவால்னி கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா திரும்பியிருந்தார்.
மொஸ்கோ விமான நிலையம் வந்தடைந்த அவர், மோசடி வழக்கு ஒன்றில் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.