ஐரோப்பிய நாடுகள், பிரேசில் உடனான விமான போக்குவரத்து தடையை நீக்கினார் டிரம்ப்
19 Jan,2021
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்துக்கு டிரம்ப் அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14-ந்தேதி மற்றும் மே மாதம் 24-ந்தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு தடைவிதித்திருந்தார்.
இந்த நிலையல் தற்போது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி அளித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சீனா, ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருந்ததால் மற்ற நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவைக்கு தற்காலிக தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.